மேலும் செய்திகள்
பிறந்தது கார்த்திகை; ஒலித்தது சரண கோஷம்
17-Nov-2024
ஊட்டி; ஊட்டி ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், 70 வது ஆண்டு தேர்திருவிழா கடந்த, 16ம் தேதி துவங்கி, ஜன., 14ம் தேதி வரை நடக்கிறது.ஊட்டி நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, ஐயனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். விரதம் இருந்து வரும் பக்தர்களின் சரணம் கோஷம் கோவில் வளாகத்தில் நாள்தோறும் ஒலிப்பது வழக்கம்.இந்நிலையில், ஸ்ரீ ஐயப்ப பஜனை சபா சார்பில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் நடந்தன. நாள்தோறும் அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும், பல்வேறு உபயதாரர்களின் உபயமாக பகல், 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்ப பஜனை சபா நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
17-Nov-2024