உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழியில் சிக்கி தவித்த காட்டெருமை மரணம்

குழியில் சிக்கி தவித்த காட்டெருமை மரணம்

குன்னுார்:குன்னுார் அருகே நீரோடை குழியில் சிக்கி உறைபனியில் தவித்த குட்டி காட்டெருமையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.குன்னுார் ரயில் நிலையம் அருகே ஜவனா கவுடர் தெரு பகுதியில் நீரோடை குழியில் காட்டெருமை குட்டி சிக்கியதாக வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ரேஞ்சர் ரவீந்தர் தலைமையில், பாரஸ்டர்கள் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், வனகாப்பாளர் திலீப் உட்பட வனத்துறையினர் மீட்டனர்.இரவு முழுவதும் உறைபனியில் இருந்ததாலும் காலில் லேசான காயம் ஏற்பட்டதாலும் நடமாட முடியாமலும் தவித்தது. தொடர்ந்து, தீ மூட்டி அதன் கால்கள் மற்றும் உடலுக்கு வெப்ப மூட்டினர். கால்நடை டாக்டர் பிரியதர்ஷினி காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் காட்டெருமை குட்டி இறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ