உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை தாக்கி பசு பலி

சிறுத்தை தாக்கி பசு பலி

பந்தலுார் : பந்தலுார் அருகே கூவமூலா பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மாடுகளை வளர்த்து வருகிறார்.மேய்ச்சலுக்கு சென்ற பசு காணாமல் போயுள்ளது தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில், பாரி ஆக்ரோ எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் இலை பறித்து கொண்டிருந்தபோது அங்கு, சிறுத்தை தாக்கிய நிலையில் பசு உயிரிழந்து கிடந்துள்ளது.தொடர்ந்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு செய்தனர். 'பசுவின் உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,' என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை