உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

குன்னுார்; குன்னுாரில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடி பூர பெருவிழா நடந்தது. குன்னுார் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர பெருவிழா நடந்தது. விழாவிற்கு மன்றத் தலைவி பிரபாவதி மோகன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ராமசாமி, சரவணகுமார், சமீனா, கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் உட்பட பலர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட கஞ்சி கலய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியாக விநாயகர் கோவிலை அடைந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானம் நிகழ்ச்சியை பிரமுகர்கள் ஈஸ்வரன், கோவர்த்தனன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ