உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவிலில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மஞ்சூர், ; மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை பூஜையை ஒட்டி, காலை,6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தாஜி தலைமையில், கோவில் இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 12 அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் அலங்கரிக்கப்பட்ட பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் முருக பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி, அன்னதான நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !