மேலும் செய்திகள்
புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?
17-Sep-2024
பந்தலுார் : பந்தலுார், தாளூர் சோதனை சாவடி அருகே, கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால், இரு மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.தமிழக - கேரளா எல்லை பகுதியான, பந்தலுார் அருகே தாளூர் சோதனை சாவடி உள்ளது. கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள், இந்த பகுதியில் இறங்கி, வேறு வாகனங்களில் மாறி செல்கின்றனர்.மேலும், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு சேரங்கோடு ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட, கழிப்பிடம் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால், இங்கு வரும் பயணிகள் அவசர நேரத்தில் திறந்த வெளியை கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். மாணவிகள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'கழிப்பிடத்தின் எதிரே, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கட்டடம் கட்டி வியாபாரம் செய்து வரும் நிலையில், அவருக்கு உதவிடும் வகையில் கழிப்பிடம் பூட்டப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்து, பயணிகளின் நலன் கருதி பூட்டப்பட்ட கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
17-Sep-2024