உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்

காட்டு யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்

கூடலுார்; முதுமலை, மசினகுடி வனப்பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர், காட்டு யானை தாக்கி காயமடைந்தார்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச்சரகம் கூட்டுறவு பாறை வனப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி காட்டு யானை வந்துள்ளது. இதனை பார்த்த, வன ஊழியர்கள் ஓடி உள்ளனர். அதில், வேட்டை தடுப்பு காவலர் மாறன்,35, என்பவரை யானை தாக்கியது. உடன், சென்றவர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி அவரை மீட்டனர்.யானை தாக்கி காயமடைந்த, மாறன் சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் தொடர்பாக வனச்சர் பாலாஜி விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை