உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு

ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு

குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டு, 13 லட்சம் கிலோ துாள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.குன்னுார் ஏல மையத்தில், 42வது ஏலம் நடந்தது. அதில், '23.93 லட்சம் இலை ரகம்; 5.91 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 29.84 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில், '14.04 லட்சம் கிலோ இலை ரகம்; 2.81 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 16.85 லட்சம் கிலோ விற்றது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் விற்பனை மற்றும் விலையில் ஏறுமுகமாக இருந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக திடீரென விற்பனையிலும், விலையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில், 41.38 சதவீதம் இலை ரகம்; 52.54 சதவீதம் டஸ்ட் ரகம் தேக்கமடைந்தது. மொத்த வருமானம், 25.86 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 153.49 ரூபாயாக இருந்தது. ஒரே வாரத்தில், 13 லட்சம் கிலோ தேக்கம் அடைந்ததுடன், 4.26 கோடி ரூபாய் மொத்த வருமானமும் சரிந்தது. கடந்த ஏலத்தை விட சராசரி விலை கிலோவிற்கு, 4.63 ரூபாய் குறைந்தது.தென் மாநில ஏலங்களில் விற்பனையும், விலையும் திடீரென சரிந்து வருவது விவசாயிகள், வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஏலதாரர்கள் கூறுகையில்,'தேயிலை வரத்து வழக்கத்தை விட அதிகரித்ததாலும், தசரா உட்பட தொடர் விடுமுறையால் ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாததாலும் தேயிலை துாள் விற்பனையாகாமல் தேக்கம் கண்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை