மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க, புதுமுறையை நகராட்சி நிர்வாகம் கையாளுகிறது.கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில், தினமும் சுமார், 10 டன் எடையுள்ள குப்பை சேகரிக்கப்படுகிறது. அந்தந்த வார்டுகளில் குப்பைகளை பெற, பிரத்தியேகமான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனாலும், பலர், காலியாக உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.இது குறித்து, அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நபர்களிடம் தகவல் தெரிவித்தும், பொது இடங்களில் குப்பை கொட்டும் போக்கு மாறவில்லை. இதனால் பொது இடங்களில் குப்பை கொட்டும் பகுதிகளில், கூடலூர் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, 'இப்பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது. மீறினால் கூடலூர் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி 'சிசிடிவி' கேமராவால் கண்காணிக்கப்படுகிறது' என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை கொட்டும் போக்கு, பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என, கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025