உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை

கூடலுார் ; கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் காட்டு யானை முகாமிட்டதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர்.கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஹெல்த்கேம் அருகே தனியார் இடத்தில் காட்டு யானை ஒன்று கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு ஹெல்த்கேம்ப் போஸ்ட் ஆபீஸ் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானை முகாமிட்டது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் பகுதியை கடந்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி யானையை பார்க்க துவங்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதி இளைஞர்கள், சப்தமிட்டு யானையை விரட்டினர். யானை தனியார் இடத்தில் சென்று முகாமிட்டது. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'பகலில் நகரை ஒட்டிய தனியார் இடத்தில் முகாமிடும் யானை, இரவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வதால், அவ்வழியாக பயணிக்கும் வாகனங்களையும் தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை