உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புக்குள் புகுந்த கட்டைகொம்பன் யானை

குடியிருப்புக்குள் புகுந்த கட்டைகொம்பன் யானை

பந்தலுார்:பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கட்டைகொம்பன் யானை முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இப்பகுதியில் உள்ள சத்துணவு கூடங்களை சேதப்படுத்தி அரிசி மூட்டைகளை, எடுத்து செல்கிறது. குடியிருப்பு பகுதியில் புகுந்து, சமையலறைகளை இடித்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலுார் பஜாரை ஒட்டிய இரும்பு பாலம் பகுதிக்கு கட்டைகொம்பன் வந்துள்ளது. இலங்கேஸ்வரன் என்பவர் வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் இருந்த வாழையை சேதப்படுத்தி உட்கொண்டது. பின், நீண்ட நேரம் நின்றிருந்த யானை சென்றுள்ளது.பின்னர், நடைபாதை வழியாக அருகில் உள்ள குடியிருப்புகளில், புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களை துரத்திய பின் சென்றுள்ளது. தேவாலா வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை