உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சரிவில் தவறி விழுந்த காட்டு யானை பலி

சரிவில் தவறி விழுந்த காட்டு யானை பலி

கூடலுார் : கூடலுர் பாடந்துறை அருகே, சரிவான பகுதியில் தவறி விழுந்த காட்டு யானை மூச்சு திணறி உயிரிழந்தது.கூடலுார், பாடந்துறை அருகே, தனியார் காபி தோட்டத்தில், காட்டு யானை இறந்து கிடப்பது நேற்று முன்தினம் மாலை தெரிய வந்தது. வனக்காப்பாளர் மாரசாமி மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்றனர். இறந்த யானை அருகே, நான்கு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தது. வன ஊழியர்கள் அருகே செல்ல விடாமல் விரட்டியது.தொடர்ந்து, வன ஊழியர்கள், போராடி யானையை விரட்டிய பின், உடலை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.கூடலுார் டி.எப்.ஓ., வித்யா (பொ.,), வனவர் வீரமணி நேற்று உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 30 வயதிருக்கும். சரிவான பகுதியில் யானை நடந்து செல்லும் போது தவறி விழுந்து, அதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ