உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டத்தில் சுருக்கு வைத்த வாலிபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

தோட்டத்தில் சுருக்கு வைத்த வாலிபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

ஊட்டி: ஊட்டி அருகே தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்த குற்றத்திற்காக வாலிபருக்கு , 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி தெற்கு வன கோட்டத்திற்கு உட்பட்ட முள்ளிகொரை பகுதியில் வன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள தோட்டத்தில் வேலி ஓரத்தில் சுருக்கு கம்பி இருந்தது கண்டறிந்தனர். விசாரணையில் கலோராம் ராத்ரே,30, என்பவர் அந்த தோட்டத்தில் காவலாளியாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். தோட்டத்திற்கு வரும் காட்டு விலங்குகளை தடுக்க சுருக்கு கம்பி பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி