உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சியின் சீல் அகற்றி கட்டுமான பணி ஆளும்கட்சி மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு

நகராட்சியின் சீல் அகற்றி கட்டுமான பணி ஆளும்கட்சி மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு

குன்னுார்:'குன்னுாரில் ஆளும் கட்சியினர் கட்டி வரும் கட்டடத்திற்கு, 3 முறை சீல் வைத்த பிறகும் பணிகள் நடந்து வருகிறது,''என,குற்றம் சாட்டப்பட்டது.குன்னுார் நகர மன்ற சாதாரண கூட்டம், கமிஷனர் பர்ஜானா முன்னிலையில், தலைவர் (பொ) வாசிம் ராஜா தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் உமாராணி பேசுகையில், ''மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு ஒரு இடத்தில் சீரமைக்கவில்லை. குறிப்பிட்ட ஆளும்கட்சி வார்டுகளுக்கு மட்டுமே எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கப்படுகிறது. எங்கள் வார்டு பணிக்கும் எம்.எல்.ஏ., நிதி ஒதுக்க வேண்டும்.'இன்கோ சர்வ்' குடோன் அருகே ஆளும் கட்சியினர் கட்டி வரும் கட்டடத்திற்கு, 3 முறை சீல் வைத்த பிறகும் பணிகள் நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கமிஷனர்: ஆய்வு செய்யப்படும்.மன்சூர்: அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 'நகராட்சியில் நிதி இருப்பு இல்லை,' என, கூறி வரும் நிலையில், இரு திட்டங்களில், 2.01 கோடி ரூபாய்; 2.96 கோடி ரூபாய் இருப்பு தீர்மான விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை வார்டு பணிகளுக்கு ஒதுக்குவதில்லை. ஒதுக்கப்பட்ட எஸ்.ஏ.டி.பி. நிதி திரும்பி சென்றுள்ளது. பொறியாளர் பிரிவில் நடக்கும் குளறுபடிகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்.கமிஷனர்: திட்ட மதிப்பீடு கொடுத்தால் அந்த திட்டங்களில் இருந்து நிதி ஒதுக்கப்படும்.ஜாகிர்: கடந்த, 8 மாதம் முன் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்த, கழிப்பிடங்களில் வைக்க, 8 நாப்கின் மிஷன்கள் வாங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எங்கும் வைக்கவில்லை. ராஜ்குமார்: மார்க்கெட் வாடகை நிலுவை தொகை வசூல் செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.கமிஷனர் பர்ஜானா; தலைவர் (பொ) வாசிம் ராஜா ஆகியோர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ