உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், மாநில அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊட்டி நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஹக்கீம் பாபு தலைமை வகித்தார்.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில், முன்னாள் எம்.பி., அர்ஜுணன், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, உட்பட, கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.மாணவரணி மாவட்ட செயலாளர் ஜிபின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை