மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், வள்ளலார் அறக்கோட்டம் மற்றும் கல்லுாரி தமிழ் துறை சார்பில், அருட்பிரகாச ராமலிங்க அடிகளாரின், 200வது ஆண்டு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.கோவை அரசு கல்லுாரி பேராசிரியர் (ஓய்வு) கனல் மைந்தன் தலைமை வகித்து பேசுகையில், ''வள்ளலார் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு இடையே, துணிச்சலான முயற்சிகளை எடுத்து மன உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர்,'' என்றார்.அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை குரு ஞானாம்பிகை பேசுகையில், ''சமரச சன்மார்க்கத்தை உருவாக்கி வேறுபாடற்ற சமுதாயத்திற்கு வள்ளலார் வழி வகுத்தார்,''என்றார்.கலைமாமணி விருது பெற்ற முனைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில்,''பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற வள்ளலாரின் வாக்கிற்கு ஏற்பட மாணவ, மாணவிகள் வாழ்ந்து காட்டவும், அறிவு பசி என்பதை மனதில் வைத்து, தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளி கொண்டு வருவதும் அவசியம்,'' என்றார். போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஜெர்மனி கட்டுரையாளர் மோரீஸ் கிலுபல், பாரதிதாசன் பல்கலை கழக தமிழ் துறை தலைவர் அலிபாவா, வள்ளலார் அறக்கோட்ட செயலாளர் சுஜாதா, பேராசிரியை அமுதா உட்பட பலர் பேசினர்.'ஒப்பிலக்கிய நோக்கில் வள்ளலார்' என்ற நுாலை வெளியிட்ட, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை குரு ஞானாம்பிகை வெளியிட கல்லுாரி செயலாளர் ஆனி பாம்ப்லானி பெற்றார்.தமிழ் துறை தலைவர் மலர்விழி வரவேற்றார். கோவை அரசு கல்லுாரி பேராசிரியை மீனாட்சி (ஓய்வு) நன்றி கூறினார்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025