மேலும் செய்திகள்
தரமான தீபாவளி பலகாரம் தயாரிக்க அறிவுரை
18-Oct-2024
ஊட்டி : 'தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் தயாரித்த இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய வேண்டும்,' என, உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.தீபாவளி பண்டிகைக்கு மக்கள் இனிப்பு, கார வகைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இனிப்பு, கார வகைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்ற பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். விதி மீறலுக்கு ரூ.2,000 அபராதம்
மேலும், தற்காலிக உணவு வணிகர்கள் மட்டும் அல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 ன் கீழ், தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும். இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். கலப்பட பொருட்களை பயன்படுத்த கூடாது.இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக நிறமி சேர்க்க கூடாது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை கொண்டு மறுபடியும் சூடுபடுத்தி உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது. தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு, பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கண்டிப்பாக கடைபிடிக்கணும்
சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர் கவரில் பொட்டலமிட கூடாது. பால் பொருள்களில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு வகைகளுடன் கலந்து வைத்திருக்க கூடாது. உணவு பொருட்களுக்கான விவர சீட்டில் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும் நாள், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகிவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பயிற்சி, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத கண்ணாடி பேழையில் வைத்து துாசு மற்றும் மாசு படாதவாறு மூடி வைத்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''விதிமுறைகளை பின்பற்றாமல் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார்கள் இருந்தால், 94440 42322 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.
18-Oct-2024