சாலையை சீரமைத்து தரக்கோரி அம்மன் காவு மக்கள் மனு
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்தது. அதில், கூடலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் காவு பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்: அம்மன் காவு சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் தினமும் தேயிலை தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் செல்கின்றன. சாலை சேதமானதால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சேதமான சாலையை சீரமைக்கவும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தர தாங்கள் ஆவன செய்ய வேண் டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.