மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
22 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷம் நடந்தது.பந்தலுார் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள பட்ட நிலையில், புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 22ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விரதமிருந்த பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.தொடர்ந்து, யாகசாலை பூஜை நடந்தது. அதனையடுத்து இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள் மற்றும் விமான கோபுர கலச பிரதிஷ்டை, விக்கிரங்கள் பிரதிஷ்டை, ஒன்பது நவக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் மற்றும் சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பங்கேற்ற கோபூஜை மற்றும் விநாயகர், முருகன், அம்மனுக்கு உருவேற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.
22 hour(s) ago
03-Oct-2025