உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டியுடன் யானை உலா

குட்டியுடன் யானை உலா

குன்னூர்: குன்னூர் -– மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானையால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் –- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில், மரப்பாலம் அருகே நேற்று காலை குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. தொடர்ந்து சாலையோர வனப்பகுதியில் சென்றது. இப்பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் மலைபாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை