மேலும் செய்திகள்
பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!
10-Apr-2025
கோத்தகிரி, ; கோத்தகிரி பஸ் நிலையத்திற்குள் உலா வரும் கால்நடைகளால், பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது.கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து சமவெளி பகுதிகளுக்கும், ஊட்டி, குன்னுார் உட்பட, கிராமப்புறங்களுக்கு, 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.மேலும், 10 க்கும் மேற்பட்டகிராம புறங்களுக்கு மினி பஸ் இயக்கமும் இருந்து வருகிறது. இதனால், பஸ் நிலையத்தில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சமீப காலமாக, சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள், நிழலுக்காக பஸ் நிலையத்திற்குள் ஒதுங்குகின்றன. சில நேரங்களில், பயணியர் இருக்கை அருகே படுத்து விடுவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கால்நடை நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது அவசியம்.
10-Apr-2025