மேலும் செய்திகள்
மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது
01-Nov-2025
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம், 8-ம் தேதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள எச்.ஏ.டி.பி மைதானத்தில் தொடங்கி கலெக்டர் அலுவலகம், ஹில்பங்க், தமிழகம் வழியாக பிங்கர் போஸ்ட் சென்று மீண்டும் எச்.ஏ. டி.பி மைதானத்தை அடையும் வகையில் மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ, பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங் கள் வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், முகவரிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போட்டி நடக்கும் நாளன்று நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் ந ல துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி இந்திரா தெரிவித்துள்ளார்.
01-Nov-2025