உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

குன்னுார் : குன்னுார் பேரக்ஸ் அருகே மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் நிதி கையாளும், இந்திய பாதுகாப்பு கணக்கு சேவையின், ஒருங்கிணைந்த நிதி ஆலோசக மையம் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மையத்தின் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சீனியர் அக்கவுன்ட்ஸ் அலுவலர் போபி அகஸ்ட் தலைமை வகித்தார். அலுவலகத்தின் பாதுகாப்பு கணக்கு சேவை ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் (டி.எஸ்.எஸ்.சி.,) சத்தியராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை துவக்கி வைத்தார். உதவி கணக்கு அலுவலர் மார்த்தாண்டவர்மா வரவேற்றார். ஏற்பாடுகளை ஆடிட்டர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி