மேலும் செய்திகள்
போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
22-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, தனியார் நிறுவனத்திலிருந்து மூன்று டன் இரும்பு தகடு திருடிய வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டில் செயல்படும், தனியார் நிறுவனத்தில் கடந்த மே மாதம், 20ம் தேதி நள்ளிரவு, மூன்று டன் எடை கொண்ட இரும்பு தகடு திருட்டு போனது. சம்பவம் குறித்து நிறுவனத்தினர் வாளையார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று பேர் கொண்ட கும்பல் இரும்பு தகடுகளை திருடி வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துக்குமார், பிரபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்றாவது நபர், திருநெல்வேலி நெடுவிலை ஸ்ட்ரீட், திசயன்விலை பகுதியைச் சேர்ந்த கதிரேசன், 24, என்பது தெரிந்தது. இதை அடுத்து தலைமறைவாக இருந்த அவரை திருநெல்வேலிக்கு சென்று நேற்று போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கதிரேசனை சிறையில் அடைத்தனர்.
22-Jul-2025