உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி

குன்னுாரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி

குன்னுார்; குன்னுாரில் வனவிலங்கு பாதுகாப்பு, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடனங்களுடன், 8 கி.மீ., துாரம் பைக் பேரணி நடந்தது. குன்னுார் புனித ஜோசப் கல்லுாரி சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு தலைமை விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மாணவரான, ஜெனரல் ராஜேஷ் சந்திரா கொடியேற்றனார். முதல்வர் ரெவரெண்ட் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சுதந்திர முக்கியத்துவம், கலாசார நடனங்கள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றன . பள்ளி வளாகத்தில் இருந்து, 79 பைக்குகள் மற்றும் கார்களுடன், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்பு, போதை பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மொபைல் போதை உட்பட நாட்டின் இளைஞர்களை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்த, 8 கி.மீ., துார விழிப்புணர்வு பேரணி, தெரு நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், பெற்றோர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை