| ADDED : ஜன 09, 2024 08:59 PM
ஊட்டி;ஊட்டி செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில், மதிப்பூதியம் அடிப்படையில், காலி பணியிடங்கள் நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணிகள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப, தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.துணை விடுதி காப்பாளர் பதவிக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமும், ஆசிரியர் டிப்ளமோ படிப்பு, செவித்திறன் படிப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊதியும் வழங்கப்படும்.ஆசிரியர் பணிக்கு இளங்கலை கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் பயின்று பி.எட்., சிறப்பு கல்வி முடித்திருக்கு வேண்டும். ஆண், பெண் ஆசிரியர்கள் இம்மாதம், 29ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, தாவரவியல் பூங்கா சாலை, ஊட்டி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.