உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்கள் கோழி வளர்க்க வாய்ப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண்கள் கோழி வளர்க்க வாய்ப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த; கணவனால் கைவிடக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டு இன கோழி குஞ்சுகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தில், 100 பயனாளிகள் வீதம், 400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 40 கோழி குஞ்சுகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளி, அதே கிராமத்தில் வசித்து ஏழையாகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.சொந்த பணத்தில், 2,200 ரூபாய் கொள்முதல் செய்ய திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன், 50 சதவீத மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட, சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி, முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு அல்லது கோழி பண்ணை திட்டங்களில் பயன் அடைந்திருக்கக் கூடாது.தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில், 30 சதவீதம் பேர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ள பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை, சரியான ஆவணங்களுடன் இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ