உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திருக்குறளை மொழி பெயர்த்த எழுத்தாளருக்கு பாராட்டு விழா

திருக்குறளை மொழி பெயர்த்த எழுத்தாளருக்கு பாராட்டு விழா

பாலக்காடு;திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்த்த, 80 வயதான பிரபல எழுத்தாளர் ராதா அச்சுதனனுக்கு பாலக்காட்டில் பாராட்டு விழா நடந்தது. கேரள மாநிலம், பாலக்காடு பிராயிரி காந்தி நினைவு கிராமீண சங்க நூலகத்தில், நடந்த இவ் விழாவை சமூக சேவகி பீனா துவக்கி வைத்தார். நுாலக தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பிராயிரி ஊராட்சி முன்னாள் தலைவரும், வார்டு கவுன்சிலருமான சுமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அரசு விக்டோரியா கல்லுாரி முன்னாள் முதல்வர் முரளி, நுாலகச் செயலாளர் சந்திரன், கேரளா பிரவாசி சங்கம் கண்ணோட்டுகாவு பிரிவு தலைவர் என்.எஸ்.கே., மேனோன் உட்பட பலர் பேசினர். எழுத்தாளர் ராதா அச்சுதன் ஏற்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ