மேலும் செய்திகள்
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
15-May-2025
குன்னுார்; குன்னுார் வெலிங்டன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், 5வது அக்னிவீரர் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நாட்டின் எல்லை பகுதிகளில் பணியாற்ற செல்ல உள்ள, 551 இளம் அக்னி வீரர்கள், உப்பு உட்கொண்டு, தேசிய கொடி, பகவத் கீதை, பைபிள், குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.முன்னதாக, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, கர்நாடகா, கேரளா ராணுவ கமாண்டிங் அலுவலர் மேஜர் ஜெனரல் வி.டி.. மேத்யூ பேசியதாவது:மிகவும் பழமையான, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் உள்வாங்கப்பட்ட கடுமையான பயிற்சி, ஒழுக்கம் ஆகியவற்றால் சிறந்த படைப்பிரிவாக பிரதிபலிக்கிறது.இங்கு பயற்சிபெறும் அக்னி வீரர்கள், தேசத்தை பாதுகாக்கவும், படைப்பிரிவு நெறிமுறைகளின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். இந்த அணிவகுப்பு, புதிதாக நியமிக்கப்பட்ட வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.'கடமையை செய்து இறப்பது மகிமை' (ஸ்வதர்மே நிதானம் ஷ்ரேயா )என்ற படைப்பிரிவின் பெருமைமிக்க நெறிமுறைகளுக்கு இணங்க, தாய்நாட்டிற்கு தன்னலமற்ற சேவை, மரியாதை மற்றும் கடமை ஆகியவற்றின் மதிப்புகளை அக்னிவீரர்கள் நிலைநிறுத்த வேண்டும். படைப்பிரிவின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லவும், அசைக்க முடியாத விசுவாசம், துணிச்சல், அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். நாட்டின் இளைஞர்களின் வலிமையில் தேசத்தை கட்டியெழுப்புவதில் அக்னிபத் திட்டம் முக்கியத்துவம் பெற்று, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.உடற்பயிற்சி, ஆயுதம் கையாளுதல், தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கம், விருதுகள் வழங்கப்பட்டன.ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்துதாஸ், துணை கமாண்டன்ட் குட்டப்பா உட்பட ராணுவ அதிகாரிகள், அக்னி வீரர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
15-May-2025