வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கூரு பக்கமும் நாலு புலியை கொண்டுவாங்க
மேலும் செய்திகள்
கவச உடை அணிந்து புலியை தேடும் பணி
12-Aug-2025
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, புலி மீண்டும் மாடுகளை தாக்கியதாக கூறப்பட்ட பகுதியில், வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். கூடலுார் தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில் உலா வரும், 3 வயது ஆண் புலி கடந்த சில மாதங்களில், 20 மாடுகளை தாக்கி கொன்றது. அதனை பிடிக்கும் பணியில், 8ம் தேதி முதல் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அப்பகுதியில், 5 கூண்டுகள், 55 தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி, 40 வன ஊழியர்கள் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இதுவரை புலி, கூண்டில் சிக்கவில்லை . இந்நிலையில், நேற்று மதியம் தேவர்சோலை, 2வது டிவிசன் பகுதியில், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இரண்டு மாடுகளை, மாமிச உண்ணி தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. மாடுகளை, புலி தாக்கியதாக மக்கள் தெரிவித்தனர். கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வானவர்கள் வீரமணி, குமரன், வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதி புல்வெளி என்பதால், மாடுகளை தாக்கிய மாமிச உண்ணியின் கால் தடம் தென்படவில்லை. இதனால் அப்பகுதியில்,வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில் மாடுகளை தாக்கியது, புலி என மக்கள் தெரிவித்தனர். இதனால், தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புலியைப் பிடிக்கும் வரை, பொதுமக்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்,'என்றனர்.
எங்கூரு பக்கமும் நாலு புலியை கொண்டுவாங்க
12-Aug-2025