மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
10 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
10 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
10 hour(s) ago
கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் குற்றங்களை தடுக்க வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.இந்நிலையில், வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்கவும், வனப்பகுதியில் எட்டு இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வனத் துறையினர் கூறுகையில், 'முதுமலை வனப்பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணிப் பதால், வேட்டை உள்ளிட்ட வன குற்றங்களை தடுக்கவும், தீ ஏற்பட்டால் உடனடியாக கண்டறிந்து அணைக்கவும் உதவியாக இருக்கும்' என்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago