மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார் : முதுமலையில், வளர்ப்பு யானைகளின் உணவுக்கான பசுந்தீவனத்தை வனத்துறை வழங்கி வருவதால், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களில், பசுந்தீவனம் வெட்டப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில், 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகளுக்கு வனத்துறை சார்பில் தினமும் காலை 9:00 மணி, மாலை 6:00 மணிக்கு அரிசி சாப்பாடு, ராகி, கொள்ளு, மினரல்மிக்சர், தேங்காய், வெள்ளம், கரும்பு, உப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.பகல் நேரங்களில், பாகன்கள் வளர்ப்பு யானைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருகின்றனர். அவைகளின் இரவு உணவுக்காக, ஆலமரம், அரசமரம், கோணிமரம், வென்தேக்குமரம், இச்சி உள்ளிட்ட மர கிளைகளை பாகன், உதவியாளர்கள் வெட்டி எடுத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இதனால், அந்த மரங்களின் வளர்ச்சி பாதிக்கபட்டது. மேலும், பறவைகள் உணவு தேடி வரும் ஆலமரம், அரசமரம் போன்றவைகளை பூ பூத்து, காய் காய்ப்பது தடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வளர்ப்பு யானைகளின் இரவு உணவு தேவையான பசுந்தழைகளை, மாட்டு பொங்கல் முதல் வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.இதன் மூலம், வளர்ப்பு யானைகள் உணவுக்காக மரக்கிளைகள் வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆலமரம், அரசமரம் போன்றவை வளர்ந்து பூ பூத்து பழங்கள் உற்பத்தியாவதன் மூலம், பறவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் சூழல் ஏற்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'வளர்ப்பு யானைகள் உணவு தேவைக்காக மரக்கிளைகள் வெட்டுவதை தவிர்க்க, வனத்துறை சார்பில் பசுந்தழைகள் வழங்கி வருகிறோம்' என்றனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வளர்ப்பு யானைகள் உணவுக்காக, மரம் கிளைகள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், மரங்கள் வளர்ச்சி அடைந்து, அதில் பூ பூத்து பழங்கள் விளையும் என்பதால், பல்வேறு பறவைகள் முதுமலைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் வரவேற்கதக்கது,' என்றனர்.
03-Oct-2025