உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஒப்பந்தம் புதுப்பிப்பதில் இழுபறி மூடும் நிலையில் வங்கி

 ஒப்பந்தம் புதுப்பிப்பதில் இழுபறி மூடும் நிலையில் வங்கி

பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்னர், வாடகை கட்டடத்தில் கனரா வங்கி கிளை செயல்பட துவங்கியது. 350 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ள நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால், இந்த வங்கி, 74-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கியின் ஒப்பந்த காலம் நிறைவு பெற்ற நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக ஒப்புதல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி மேலாளர் பிலஸ்டன் கூறுகையில், '' இதில், முறையாக அனுமதி பெற்ற பின்னரே ஒப்பந்தம் புதுப்பிக்க முடியும். அதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி