உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடியால் வங்கி சேவை பாதிப்பு

இடியால் வங்கி சேவை பாதிப்பு

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடி தாக்கியதில், வங்கியின் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் நேற்று காலை முதல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடி இடித்ததில், வங்கியின் இணையதள சேவை மற்றும் 'எலக்ட்ரானிக்' பொருட்கள் பழுது அடைந்தன. இதனால், வங்கியின் சேவை பாதிக்கப்பட்டதுடன், நேற்று காலை முதல் வங்கிக்கு பல்வேறு தேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் பாதிப்பு சீரமைக்கப்பட்டதால், வங்கி சேவை சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை