| ADDED : செப் 02, 2026 02:20 PM
குன்னுார்: குன்னுார் அரசு பள்ளி மற்றும் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், 6வது முறையாக புகுந்த கரடி, உணவுக்காக கதவு மற்றும் ஜன்னல்கள் உடைத்து சென்றது. குன்னுார் டென்ட் ஹில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை கல்லுாரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு உணவு தேடி கரடி வந்து செல்கிறது. ஏற்கனவே இங்குள்ள சத்துணவு மைய கூடம், கடைகளை உடைத்து உணவு பொருட்களை சேதம் செய்தது. இந்நிலையில், தற்போது ஆறாவது முறையாக இந்த பகுதிக்கு வந்த கரடி கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. குடிநீர் தொட்டியையும் உடைத்தது. மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் தொடர்ந்து வந்து செல்லும் இந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,’ என்றனர்.