உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டென்ட் ஹில் பகுதியில் கரடி; கடையை உடைத்து சேதம்

டென்ட் ஹில் பகுதியில் கரடி; கடையை உடைத்து சேதம்

குன்னுார்; குன்னுார் பகுதிகளில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.குன்னுார் டென்ட்ஹில் பகுதிக்கு சமீபத்தில் வந்த கரடி அரசு மேல் நிலைப்பள்ளி, துவக்கப் பள்ளி சத்துணவு மையங்களின் கதவை உடைத்து உள்ளே சென்று, எண்ணெய் உட்கொண்டு, உணவு பொருட்களை நாசப்படுத்தியது. அருகில் உள்ள மாற்று திறனாளி மைய கதவை உடைக்க முயற்சி செய்தது.இந்நிலையில், மீண்டும் இப்பகுதிக்கு வந்த கரடி, சத்துணவு கூடத்தின் தரமில்லாத கதவை மீண்டும் உடைத்தது. தொடர்ந்து விநாயகர் கோவில் அருகே உள்ள சசிகுமார் என்பவரின் பெட்டி கடையை உடைத்து சிப்ஸ், எண்ணெய், சர்க்கரை உட்பட பொருட்களை சேதம் செய்தது. ஆய்வு செய்த வனத்துறையினர், நிவாரண தொகை, 5 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ