மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;காந்திபேட்டை குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் நுழைவது தொடர்கதை ஆகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி நகரின் மையப்பகுதிக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து மீண்டும் அந்த பகுதியில் இருந்து வெளியேறி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் குடியிருப்பு சாலைகளில் உலா வந்தது. நேற்று ஊட்டி அடுத்த காந்திபேட்டை குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி திரிந்தது. மேலும் இரவு நேரங்களில் ஊரின் அருகில் உள்ள சாலையோரத்தில் சுற்றி திரிகிறது. வனத்துறையினர் கூறுகையில், ' இரவில் வரும் மக்களும், இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர்.
19 hour(s) ago
03-Oct-2025