உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமங்களில் கரடி உலா; அச்சத்தில் பொதுமக்கள்

கிராமங்களில் கரடி உலா; அச்சத்தில் பொதுமக்கள்

ஊட்டி; ஆடாசோலையில் இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் கரடி சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில், கல்லட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் உள்ளன. அதில், கிராமங்களில் காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, புதுமந்து பகுதியில் அதிகாலை நேரத்தில் பேக்கரிக்குள் கரடி ஒன்று நுழைந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை உட்கொண்டது. தற்போது, ஆடாசோலை பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி, அந்தப் பகுதியில் இருந்த கறிக்கடை கதவை உடைத்து உள்ளே சென்று பொருள்களை சூறையாடி சென்றுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'இந்த கரடி எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரும் என்பதால் அச்சமாக உள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ