பகலில் உலா வரும் கரடி மக்கள் நடமாட அச்சம்
குன்னுார்,: நீலகிரி மாவட்டம், குன்னுார் - ஊட்டி சாலை, காணிக்கராஜ் நகர் பகுதியில், நேற்று முன்தினம் காலை கரடி உலா வந்தது. அங்கிருந்து, சின்ன பிக்கட்டி சாலையில் சென்று நீண்ட நேரம் அமர்ந்துள்ளது. மக்களின் சப்தம் கேட்டு கரடி அங்கிருந்து, பழைய அருவங்காடு வனப்பகுதிக்கு சென்றது. அதை மக்கள் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் கரடி மட்டுமின்றி, சிறுத்தையும் அவ்வப்போது வந்து செல்கிறது. 'தற்போது காலை நேரத்திலேயே கரடி உலா வரும் நிலையில், பள்ளி மாணவ - மாணவியர் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு கூண்டு வைத்து கரடியை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்' என்றனர்.