உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாரதிய கிசான் விவசாய சங்க கூட்டம்; இயற்கை தேயிலை சந்தை ஏற்படுத்த முடிவு

பாரதிய கிசான் விவசாய சங்க கூட்டம்; இயற்கை தேயிலை சந்தை ஏற்படுத்த முடிவு

கோத்தகிரி; கோத்தகிரியில் பாரதிய கிசான் விவசாய சங்க கூட்டம் நடந்தது.சங்க மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். துணை தலைவர் நாராயணசாமி, மாநில அமைப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி இட்டக்கல் குழும இயக்குனர் போஜராஜன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.அகில இந்திய பாரதிய கிசான் சங்க பொது செயலாளர் மோகினி மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில், தேயிலை வாரிய உதவி தலைவர் ராஜேசிடம் விவசாயிகள் பேசும்போது, 'நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகள், 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு அதிக பரப்பளவில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சி, காரணமாக, குழந்தைகளின் கல்வி, மருத்துவம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், விவசாயிகள் நலன் கருதி, உற்பத்தி செலவை கணக்கிட்டு, தேசிய சந்தையில் விற்பனை செய்து, கட்டுப்படியான விலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்,' என்றனர்.முடிவில், இயற்கை தேயிலை சந்தை ஏற்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இயற்கை விவசாய அணி நிர்வாகி முரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி