பயோ காஸ் பேட்டி
கூடலுார் சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் ஆனந்தராஜா கூறுகையில்,‘‘ பசுமாடு வளர்க்கும் விவசாயிகள், அதில் கிடைக்கும் சாணத்தை கொண்டு அரசின் உதவியுடன், ‘பயோ காஸ்’ உற்பத்தி செய்து வருகின்றனர். இதனை தங்களின் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்துவதால், செலவுகளை குறைக்க முடிகிறது. மேலும், அதன் கழிவுகளை இயற்கை உரமாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை இருக்காது. இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை இங்குள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள ஊக்குவிப்பு அளித்து வருகிறோம்,’’என்றார்.