உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்

கோவில் திருவிழாவில் பறவை காவடி, பால் குடம்

கூடலுார்; கூடலுார், 2வது மைல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி பூட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.கூடலுார், 2வது மைல் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், 43வது ஆண்டு தேர்திருவிழா, 28ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் சிவன், சக்தி, முருகன், நவகிரக வழிபாடுகளுடன் துவங்கியது. 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு வேடன்வயல் ஆற்றில் இருந்து அம்மன் குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு வேடன்வயல் பாலத்திலிருந்து, பறவைக்காவடி ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஊர்வலம், 2வது மைல் வரை சென்று நிறைவு பெற்றது. இரவு, தேர் ஊர்வலம் நடந்தது.நேற்று, காலை சிறப்பு பூஜைகளுடன், கோவிலில் இருந்து கரக ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை