மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
22 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
22 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
22 hour(s) ago
கூடலுார்:கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், கோடை காலத்தை வரவேற்கும் விதமாக, பூத்து குலுங்கும் ஊதா நிற ஜெகரண்டா பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.கூடலுார் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தனியார் தோட்டங்கள்; அதனை ஒட்டிய சாலை ஓரங்களில் அழகுக்காக பூ மரங்கள் நடவு செய்யப்பட்டன. அதில், ஆண்டுக்கு ஒரு முறை, கோடை சீசனில் பூத்து குலுங்கும் பூக்கள் உள்ளூர் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது.தற்போது. கூடலுார் பகுதியில் கோழிக்கோடு சாலை, தேவர்சோலை ஓரங்கள், தனியார் எஸ்டேட் பகுதி, பந்தலுார் நெலாக்கேட்டை வனப்பகுதிகளில், பூத்து குலுங்கும் ஊதா நிறத்திலான ஜெகரண்டா பூக்களை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்து செல்கின்றனர். பலர் இந்தப் பூக்கள் அருகே, 'செல்பி' எடுத்து செல்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago