உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலை உணவு திட்டம்; கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டம்; கலெக்டர் ஆய்வு

ஊட்டி;ஊட்டி ராமகிருஷ்ணபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி துவக்க பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு செய்தார்.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் கல்வி திறனுடன், உடல்நிலையை மேம்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில், 290 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், ஊட்டி ராமகிருஷ்ணபுரம் நடு நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி துவக்க பள்ளிகளில், கலெக்டர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவை உட்கொண்ட கலெக்டர், உணவின் தரம், சமையல் கூடத்தின் சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதியை ஆய்வு செய்து, பள்ளி மாணவ மாணவியரிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை