மேலும் செய்திகள்
ஏமாற்றும் நபர்களை உள்ளூர் மக்கள் நம்ப வேண்டாம்!
23-Sep-2025
கூடலுார்; கூடலுார், நந்தட்டி அருகே செக்சன்-17 அரசு நிலத்தில் புதிதாக கட்டப்படும் கட்டட பணியை நிறுத்த கூறி, வருவாய்துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. கூடலுாரில் செக்சன்-17 அரசு நிலங்களில், புதிய கட்டடங்கள் கட்டவும், அரசு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நந்தட்டி உள்ளிட்ட சில பகுதிகளில், அனுமதியின்றி புதிய கட்டடங்கள் கட்டுவதாக வருவாய் துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில், வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், அப்பகுதிகளில் செக்சன்-17 அரசு நிலத்தில் அனுமதி இன்றி புதிய கட்டடங்கள் கட்டுவது தெரிய வந்தது. 'கட்டட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,'என, கூறி வருவாய் துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. கூடலுார் தாசில்தார் முத்துமாரி கூறுகையில், ''செக்சன்-17 நிலத்தில் அனுமதி இன்றி புதிதாக கட்டப்படும் கட்டட பணிகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி, கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 15 நாட்களுக்குப் பின் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
23-Sep-2025