மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
குன்னுார்:அருவங்காடு ஒசட்டி பகுதியில் அடிக்கடி திருட்டு முயற்சிகள் நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பைக்குகள் திருடப்பட்ட நிலையில், பூட்டிய வீடுகளை உடைத்து சில பொருட்கள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒசட்டி சர்ச் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் கீதா என்பவரின் வீட்டின் கதவுகள் உடைத்து திருட்டு முயற்சி நடந்தது.சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்து வந்த நிலையில், மூன்று பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதே நேரம் அங்கு வந்த ரோந்து போலீசாரிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதா என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் பூட்டை உடைத்து வாட்ச் மற்றும் குத்து விளக்கு திருடிச் சென்றனர். தற்போது, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி சென்ற நிலையில், மீண்டும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. அடிக்கடி இந்த பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் போலீசார் திருடர்களை பிடிக்க நடவடிக்கை வேண்டும்,'' என்றனர்.
27-Dec-2025