சாலையில் நிற்கும் பஸ் அவதிப்படும் பயணிகள்
பந்தலுார்: கோவை, ஊட்டி, கூடலுார் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, குருவாயூர், சுல்தான் பத்தேரி உட்பட பல பகுதிகளுக்கு பந்தலுார் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் பகல் நேரங்களில் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆனால், மாலை, 6:00 மணிக்கு மேல் இயக்கப்படும், கேரளா மாநில அரசு பஸ்கள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் காத்திருக்கும் பயணிகள், பஸ்களில் ஏற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கேரளா மாநில அரசு பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.