உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் ஸ்டாண்ட் கட்டட கழிவுகள் சாலையில் கொட்டுவதால் பாதிப்பு

பஸ் ஸ்டாண்ட் கட்டட கழிவுகள் சாலையில் கொட்டுவதால் பாதிப்பு

குன்னுார்,; குன்னுார் பஸ் ஸ்டாண்டை பொலிவுபடுத்த, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகம், உள்ளூர் பஸ்களுக்கு பயணிகளுக்கு வசதிகள் செய்து, இல்லாத வகையில் விடுதிகளை சீரமைக்க மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இங்கு அகற்றப்படும் கட்டட கழிவுகள் குப்பை குழிக்கு செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இவ்வழியாக பழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'கட்டட கழிவுகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது. டெண்டர் எடுக்கும் போது கட்டட கழிவுகள் அகற்றுவதற்கு, தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதனை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'பஸ் ஸ்டாண்ட் கட்டட கழிவுகள் மாற்று பயன்பாட்டிற்கு தேவைப்படும் போது எடுப்பதற்காக இங்கு கொட்டப்பட்டது. இனிமேல் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை