உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கரடியை பிடிக்க கூண்டு

கரடியை பிடிக்க கூண்டு

குன்னுார்; குன்னுார் பழத்தோட்டம் பகுதியில் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.குன்னுார் பகுதியில் கரடிகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து, வீடுகளின் கதவை உடைத்து பொருட்களை உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில், குன்னுார் பழத்தோட்டம், பகுதியில் தொடர்ந்து கரடிகள் 'விசிட்' செய்து வருவதால், தோட்டங்களில் பணிக்கு செல்வோரும், சாலையில் நடமாட மக்களும் அச்சப்படுகின்றனர். மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு அளித்த புகார்களின் பேரில், சமீபத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். பகலில் கூண்டை அடைத்து, இரவில் மட்டும் திறந்து வைத்து, உள்ளே எண்ணெய், பழங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வைத்து வருகின்றனர். வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ