மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு
05-Oct-2024
குன்னூர் : குன்னுார் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை:குன்னுார் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி காலை, 11:00 மணியளவில், குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. குன்னுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த கோரிக்கைகள், குறைகளை முன்வைப்பதுடன், தங்களின் ஆலோசனைகளையும் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Oct-2024